யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபர் நியமனம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நிர்வாக அதிகாரிகள் ஜனாதிபதி, பிரதமருக்கு முறைப்பாடு.

3 months ago



யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபர் நியமனம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நிர்வாக அதிகாரிகள் ஒப்பமிட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு முறையிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நிலவிய மேலதிக அரச அதிபர் வெற்றிடத்திற்காக புதிதாக ஒருவர் கடந்த திங்கள்கிழமை நியமிக்கப்பட்டார்.

மேலதிக அரச அதிபராக நியமிக்கப்பட்ட நிர்வாக சேவை தரம் 1ஐச் சேர்ந்த அதிகாரியை விடவும் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தின் கீழான நிர்வாகத்தில் மட்டும் 10 அதிகாரிகள் இருக்கின்றனர் எனவும், அவர்களை கருத்தில் எடுக்காது 11 ஆவது இடத்தில் உள்ள ஓர் அநிகாரியை நியமித்துள்ளமை தொடர்பிலேயே ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் முறையிடப்பட்டுள்ளது.

இவ்வாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் முறையிடப்பட்ட முறைப்பாட்டுக் கடிதத்தில் சேவை மூப்பில் உள்ள நிர்வாக சேவை தரம் ஒன்றைச் சேர்ந்த 8 அதிகாரிகள் ஒப்பமிட்டுள்ளனர் எனத் தெரிகின்றது.

அண்மைய பதிவுகள்