சர்வதேச உளநல தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் இன்று உளநலம் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை
2 months ago
சர்வதேச உளநல தினத்தை முன்னிட்டு "உங்களுக்கு உதவி செய்ய நாங்கள் இருக்கிறோம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்" எனும் தொனிப்பொருளில் மன்னார் மாவட்டத்தில் உளநலம் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் இன்று வியாழக்கிழமை (10) காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிராந்திய உளநல பிரிவு மற்றும் மன்னார் பொது வைத்தியசாலையின் ஏற்பாட்டில் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இன்றைய தினம் காலை மன்னார் பொது வைத்தியசாலையிலிருந்து குறித்த ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஊர்வலமானது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை வீதியூடாக மன்னார் பொலிஸ் நிலைய பிரதான வீதியை சென்றடைந்தது.