பிரதமரானால் தமிழ் மக்களுக்கு எதிரான குற்றங்களைப் புரிந்த ராஜபக்ஷர்களையும், ஏனைய குற்றவாளிகளையும் சர்வதேச நீதிமன்றில் நிறுத்த தலைமையை நான் வழங்குவேன்.-- பியெர் பொய்லிவ் உறுதியளிப்பு

அடுத்த தேர்தலில் தான் பிரதமராக தெரிவு செய்யப்பட்டால், தமிழ் மக்களுக்கு எதிரான குற்றங்களை புரிந்த ராஜபக்ஷர்களையும், ஏனைய குற்றவாளிகளையும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு அவசியமான தலைமைத்துவத்தை நான் வழங்குவேன் என கனடாவின் பிரதான எதிர்க்கட்சியான கொன்சவேட்டிவ் கட்சியின் தலைவர் பியெர் பொய்லிவ் உறுதியளித்துள்ளார்.
கனடாவின் டொரன்டோ நகரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பியெர் பொய்லிவ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களுக்கு எதிராக இனப் படுகொலையை நிகழ்த்திய இலங்கை அரசாங்கத்தை தனிமைப்படுத்தி தண்டிக்கும் நோக்கில் 2013 ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற பொது நலவாய மாநாட்டை கனடாவின் முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் புறக்கணித்தமையினை பியெர் பொய்லிவ் நினைவுக் கூர்ந்துள்ளார்.
இந்நிலையில், அடுத்த தேர்தலில் தான் பிரதமராக தெரிவு செய்யப்பட்டால் இலங்கையில் போர் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் தரப்பினரை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்வதற்கு அவசியமான தலைமைத்துவத்தை வழங்கத் தயாராக இருப்பதாக பியெர் பொய்லிவ் தெரிவித்துள்ளார்.
கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவி விலகியதை அடுத்து, கனடா பிரதமர் பதவிக்காக கனடாவின் பிரதான எதிர்க்கட்சியான கொன்சவேட்டிவ் கட்சியின் தலைவர் பியெர்பொய்லிவ் போட்டியிடவுள்ளார்.
மேலும் 45 ஆவது கனடிய நாடாளுமன்றத்திற்கு 'ஹவுஸ் ஆஃப் காமன்ஸ்' உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2025 ஆம் ஆண்டுக்கான கனேடிய கூட்டாட்சித் தேர்தல் அக்டோபர் 20 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
