ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இடம்பெறும் - தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவிப்பு
ஸ்ரீ லங்கா ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நிச்சயம் இடம்பெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கான வாக்குப் பெட்டிகளைத் தயார்படுத்துமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஜனாதிபதித் தேர்தல் திட்டமிட்டவாறு நடைபெறும். அதற்கான ஏற்பாடுகள் தற்போது துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன.
வாக்குச்சாவடி விவரங்கள் கிடைத்தவுடன், வாக்குப்பெட்டிகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அதனை விரைவில் சரிசெய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.
இதேவேளை - தேர்தலை இலக்காகக் கொண்டு, தேர்தல் அதிகாரிகள் கணக்ககெடுப்பு விரைவில் நடத்தப்படும்.
உள்ளூராட்சித் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளுடன் அடுத்த வாரம் கலந்துரையாடவுள்ளோம்.
ஜனாதிபதித் தேர்தல் அநேகமாக செப்ரெம்பர் 17ஆம் திகதிக்குப் பின்னரும் ஒக்ரோபர் 16ஆம் திகதிக்கு முன்னருமான காலப்பகுதியில் நடைபெறும் - என்றார்.

அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
