கொழும்பு, தாமரை கோபுரத்தில் இருந்து குதித்து உயிரிழந்த மாணவி தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியீடு

கொழும்பு, தாமரை கோபுரத்தின் 29ஆவது மாடியிலிருந்து குதித்து உயிரிழந்த மாணவி தொடர்பில் பொலிஸார் சில தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
சம்பவத்தில், கொள்ளுப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய மாணவியே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணையில் குறித்த மாணவி கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் 11 ஆம் ஆண்டு படித்து வருவதும், பாடசாலை முடிந்து தாமரை கோபுரத்திற்கு சென்று 29 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, கடந்த ஜூலை மாதம் கொம்பனித்தெருவில் ஒல்டேயார் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் 67வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த 15 வயதுடைய சிறுமியும் சிறுவனும் குறித்த மாணவியின் பாடசாலை நண்பர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும், நண்பர்கள் உயிரிழந்ததால் குறித்த மாணவி கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாக அவரது தந்தை பொலிஸில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
மாணவியின் சடலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு கொழும்பு பொலிஸ் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
