வெளிநாட்டு இராஜதந்திர சேவைக்கென ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் 4 தூதுவர்களையும் உயர்ஸ்தானிகர் ஒருவரையும் நியமிக்கும் நிகழ்வு ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
அதன்படி கட்டார் நாட்டின் தூதுவராக ஆர்.எஸ்.கான் அசாத், ரஷ்யத் தூதுவராக திருமதி எஸ்.கே. குணசேகர, குவைத் தூதுவராக எல்.பி.ரத்நாயக்க, எகிப்தியத் தூதுவராக ஏ.எஸ்.கே.செனவிரத்ன நியூஸிலாந்து உயர்ஸ்தானிகராக டபிள்யூ. ஜீ.எஸ். பிரசன்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.