ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் அதிகாரமளிக்கப்பட்ட முகவர்களுடனான கலந்துரையாடல்.

3 months ago


ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் அதிகாரமளிக்கப்பட்ட முகவர்களுடனான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (16.09.2024) 09.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த தெரிவத்தாட்சி அலுவலர்  எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் ஒரு கட்டமாக முகவர்களின் பிரசன்னத்துடன் அஞ்சல் வாக்களிப்பு சிறப்பாக நிறைவடைந்துள்ளதாகவும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியமைக்காக தமது நன்றியினைத் தெரிவித்ததுடன், போட்டியிடும் வேட்பாளர்களில் 19 வேட்பாளர்களே இதுவரை அதிகாரமளிக்கப்பட்ட முகவர்களை நியமித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 511 வாக்களிப்பு நிலையங்களுக்கும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைக்கப்படவுள்ள 41 வாக்கெண்ணும் நிலையங்களுக்கும், 14 அஞ்சல் வாக்கெண்ணும் நிலையங்களுக்கும் மற்றும் பெறுபேறு தயாரித்து வெளியிடும் நிலையத்திற்கும் வேட்பாளர்களின் முகவர்களை உரிய எண்ணிக்கையில் சரியான பொறிமுறையூடாக சட்டத்தின் வழி நியமித்து நீதியாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடைபெறுவதனை உறுதிப்படுத்துவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயற்பட சிறப்பான ஒத்துழைப்பினை நல்குமாறு தெரிவத்தாட்சி அலுவலர் கேட்டுக்கொண்டார். 

இக் கலந்துரையாடலில் தேர்தல்கள் உதவி ஆணையாளர் . இ.கி.அமல்ராஜ் அவர்கள் பங்குபற்றி கருத்துக்களை முன்வைத்தார்.

இக் கலந்துரையாடலில் வேட்பாளர்களின் அதிகாரமளிக்கப்பட்ட முகவர்கள் பங்குபற்றினார்கள்.