யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் யாழ். பொலிஸாருக்குமிடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது.

2 months ago

யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் யாழ். பொலிஸாருக்குமிடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இந்தக் கலந்துரையாடல் நேற்று நடை பெற்றது.

தேர்தல் கால வன்முறைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன் பாராளுமன்றத் தேர்தல் காலங்களில் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் வன்முறைகள் தடுக்கும் முகமாக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கலந்துரையாடலில்    வேட்பாளர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.