வடக்கு ஆளுநருக்கும் பிரிட்டனின் இந்தோ - பசுபிக் பிராந்திய அமைச்சருக்கும் இலங்கைக்கான பிரிட்டன் தூதுவருக்கும் இடையில் சந்திப்பு

2 months ago



வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், பிரிட்டனின் இந்தோ - பசுபிக் பிராந்திய அமைச்சர் கத்தரின் வெஸ்ட், இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் அன்ரூ பட் ரிக்ஸ் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணம் பொதுநூலகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் பொதுநூலகத்தைப் பார்வையிட்ட பின்னர் அங்குள்ள கேட்போர் கூடத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இதில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் சங்கப் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.

இதில் முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் இந்தச் சந்திப்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



அண்மைய பதிவுகள்