எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 907 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என்று அந்த மாவட்டத்தின் தெரிவத்தாட்சி அலுவ லர் எஸ். முரளிதரன் தெரிவித் துள்ளார்.
மேலும், கிளிநொச்சி மாவட்டத்தில் 108 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. வாக்கெண்ணும் பணிக்காக பழைய மாவட்ட செயலக வளாகத்தில் 8 நிலையங்கள் தயார்ப்படுத்தப்படுகின்றன.
புதன்கிழமை (இன்று) முதல் நடைபெறவுள்ள தபால் மூல வாக்களிப்புக்காக 3,656 அரச உத்தியோகத்தர்கள் தகுதி பெற்றுள்ளார்கள். அவர்களுக்காக 96 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் இன்று புதன்கிழமையும் பொலிஸார் 4 மற்றும் 6ஆம் திகதியும் ஏனைய அரச உத்தியோகத்தர்கள் 5, 6ஆம் திகதிகளில் வாக்களிக்கும் வகை யிலும் ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளன.
குறித்த நாட்களில் அவசர வேலை உள்ளிட்ட தவிர்க்க முடியாத காரணத்தால் வாக்களிப்பை தவறவிடுகின்ற உத்தி யோகத்தர்கள். 11, 12ஆம் திகதிகளில் பழைய மாவட்ட செயலகத்தில் தமது வாக்கை செலுத்த முடியும்.
இதேவேளை, வாக்காளர்கள் அனைவரும் நேரகாலத்தோடு வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிக்குமாறும் இறுதி நேரம் வரை காத்திருக்காது வாக்குரிமையை பயன் படுத்துமாறும் இதன்போது அவர் தெரிவித்தார்.
அத்துடன், தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 3 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்றும் கிளிநொச்சி மாவட்ட தெரி வித்தாட்சி அலுவலர் தெரிவித்தார்.