முதன் முறையாக இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் களமிறங்கும் யாழ் இளைஞன் வியாஸ்காந்த்
2024 இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் (SRH) மற்றும் லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணிகளுக்கிடையிலான இன்றைய (08) போட்டியில், சன்ரைசர்ஸ் அணியை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் முதன் முறையாக யாழ்ப்பாணத்து இளைஞன் விஜயகாந்த் வியாஸ்காந்த்(Vijayakanth Viyaskanth) களமிறங்கியுள்ளார்.
இந்த நிலையில், அந்த வெற்றிடத்திற்கு சன்ரைசர்ஸ் அணியால் மாற்று வீரராக வியாஸ்காந்த் இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தார்
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற லக்னோ அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்திருந்தது.
பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய வியாஸ்காந் தனது முதலாவது போட்டியில் விக்கெட் எதனையும் பெறாவிட்டாலும் சிறப்பாக பந்துவீசி குறைந்தளவான ஓட்டங்களையே எதிரணியினருக்கு விட்டுக்கொடுத்தார்.
நான்கு ஓவர்கள் பந்து வீசி 27 ஓட்டங்களை மட்டுமே கொடுத்து லக்னோ அணியின் துடுப்பெடுத்தாளர்கள் மீது தனது பந்து வீச்சு மூலம் அழுத்தத்தை ஏற்படுத்தியிருந்தார்.
இப் போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்கு 166 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதல் இன்னிங்ஸ் முடிவில், லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 165 ஓட்டங்களை பெற்றது.
லக்னோ அணி சார்பாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ஆயுஷ் பதோனி 30 பந்துகளில் 55 ஓட்டங்களையும் நிக்கலஸ் பூரன் 26 பந்துகளில் 48 ஓட்டங்களையும் பெற்றனர்.
சன்ரைசர்ஸ் அணி சார்பில் புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுக்களையும் பட் கம்மின்ஸ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.