கனடாவில் வங்கி மோசடிகள் முறைப்பாடுகளை கையாளுகை தொடர்பில் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

2 months ago



கனடாவில் வங்கி மோசடிகள் முறைப்பாடுகளை கையாளுகை தொடர்பில் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்த புதிய மாற்றங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

வங்கிகளில் வாடிக்கையாளர்கள் மோசடிகளில் சிக்கும் போது அவர்களை பாதுகாக்கும் வகையில் சில மாற்றங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

கடந்த முதலாம் திகதி தொடக்கம் கனடாவின் பிரதான வங்கிகளில் இந்த மாற்றம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வங்கிகள், நியாயமான முறையில் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கக்கூடிய வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி வாடிக்கையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலான முறைப்பாடுகளை கையாளும் போது பிரதான வங்கிகள் மூன்றாம் தரப்பு குறைகள் அதிகாரி ஒருவரின் சேவைகளையே பெற்றுக் கொண்டது.

எனினும் இந்த நடவடிக்கையானது ஒரு பக்க சார்பானது என குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து வங்கி சேவை மற்றும் முதலீடுகள் தொடர்பான குறைகேள் அதிகாரியின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டியது அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் வங்கி வாடிக்கையாளர்கள் பாதுகாக்கப்படுவர் என தெரிவிக்கப்படுகின்றது