கிளிநொச்சி இரணைமடுக் குளத்தில் நீராடச் சென்ற 14 வயது சிறுவன் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
குறித்த சிறுவன் அவரது சகோதரன் மற்றும் நண்பர்களுடன் நேற்று முற்பகல் நீராடச் சென்றபோதே நீரில் மூழ்கிக் காணாமல்போயுள்ளார்.
இந்த நிலையில் குறித்த சிறுவனை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.