உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை இன்று குறைந்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளன.

5 months ago


உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை இன்று (05) குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ப்ரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76.77 டொலராகவும், வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.39 டொலராகவும் குறைந்துள்ளது.

ப்ரெண்ட் பீப்பாய் ஒன்றின் விலை கடந்த வெள்ளிக்கிழமை சுமார் 3% ஆல் குறைந்துள்ளது, இது ஜனவரி மாதத்திற்குப் பிறகு ஏற்பட்ட மிகக் குறைந்த விலைச்சரிவாகும்.  

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மோதல் சூழ்நிலையால் கச்சா எண்ணெய் விநியோகம் தடைபடும் என்ற அச்சம் சந்தையில் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அண்மைய பதிவுகள்