யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் கடந்த திங்கள்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக் கான நீர் வசதிகள், மின்சாரம் வசதிகள், காணி அபிவிருத்தி மற்றும் சுற்றுலா அபிவிருத்தி போன்ற விடயங்கள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.
இந்தக் கலந்துரையாடலில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், தெல்லிப்பழை பிரதேச செயலாளர், விமானப் படை அதிகாரிகள், ஏவியேஷன் நிறுவன உதவி முகாமையாளர், பலாலி விமான நிலைய செயல் பாட்டு முகாமையாளர், நீர் வழங்கல் மற்றும் வடிகால மைப்பின் உதவிப் பணிப்பாளர், தொழில்துறைத் திணைக்களம், வீதி அபிவிருத்தி திணைக்களம் சந்தைப்படுத்தல் பிரிவு ஆகிய வற்றின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.