காசா வடக்கில் நடந்த தாக்குதலில் 50 இற்கும் மேற்பட்ட சிறார்கள் கொல்லப்பட்டுள்ளனர்.-- ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் தெரிவிப்பு
கடந்த இரண்டு நாள்களில் மாத்திரம் காசா வடக்கு பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 50 இற்கும் மேற்பட்ட சிறார்கள் கொல்லப்பட்டுள்ளனர் என ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் தெரிவித்துள்ளது.
நூற்றுக்கணக்கான மக்கள் செறிந்து வாழும் இரண்டு தொடர் மாடிகள் தாக்கப்பட்டதையடுத்தே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கெதரின் ரஸ்ஸல் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், போலியோ தடுப்பூசி வழங்கிக் கொண்டிருந்த ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் பணியாளர்கள் சிலரும் காயமடைந்துள்ளனர் என தெரிவிக் கப்பட்டுள்ளது.
மேற்படி பணியாளர்கள் பயணித்த கார் தாக்கப்பட்டதன் காரணமாக அவர்கள் காயமடைந்ததுள்ளனர்.
இதில் தடுப்பூசி வழங்கும் நிலையத்திற்கு அருகிலிருந்த 3 சிறார்களும் பலியாகியுள்ளனர்.
பலர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து, பல தொண்டு நிறுவனங்கள் தமது அதிருப்தியையும் கண்டனத்தையும் வெளியிட்டுள்ளன.