யாழ்.நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியசாலையில் வாக்களிக்கச் சென்ற இளைஞன் வாக்குச்சீட்டை கிழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
3 months ago
யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியசாலையில் வாக்களிக்க சென்ற இளைஞன் வாக்குச்சீட்டை கிழித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று இடம்பெற்றுவரும் நிலையில், வாக்கெடுப்பு உத்தியோகத்தர்களால் வழங்கப்பட்ட வாக்குச்சீட்டையே குறித்த இளைஞன் இரண்டாக கிழித்துள்ளார்.
குறித்த நபரிடம் யாழ்ப்பாணம் தேர்தல் திணைக்கள உத்தியோகத்தர்கள், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்புரைக்கமைய அடுத்த கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த இளைஞன் தேர்தலில் வாக்களிப்பது இதுவே முதல் தடவை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.