சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளுடன் சீன பெண் கைது.

5 months ago


காலி, ஹபராதுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹெட்டிவத்த பகுதியில் சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளுடன் சீன பிரஜை ஒருவர் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர்.

ஹபராதுவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

41 வயதுடைய சீன பிரஜையொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 400 சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபராதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மைய பதிவுகள்