வடக்கில் அதானி பசுமை ஆற்றல் திட்டம் தொடர்பில் சுற்றுச்சூழல் கவலைகள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்ட போதிலும், திட்டத்தை சமரசம் செய்ய முடியாது என மின் மற்றும் எரிசக்தி அமைச்சின் உயர்மட்ட வட்டாரம் தெரி வித்துள்ளது.
எவ்வாறாயினும் சேதத்தைத் தணிப்பதற்கான நடவடிக்கைகளை மாத்திரமே எடுக்க முடியும் என்றும் அமைச்சரின் உயர் அதிகாரியொருவர் தெரிவித் துள்ளார்.
மன்னார் மற்றும் பூநகரி மாவட்டங்களில் அதானி காற் றாலை மின்திட்டம் சுற்றுச்சூ ழல் பாதிப்பு மற்றும் 'வெளிப்ப டைத்தன்மை இல்லாமை' ஆகி யவற்றின் அடிப்படையில் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத் தப்பட்டுள்ளது.
சுமார் 150 இனங்களைச் சேர்ந்த ஒரு மில்லியன் பறவைகள் இடம்பெயர்ந்து மன்னாருக்கு வரும், மத்திய ஆசிய விமானப் பாதையின் குறுக்கே வரவிருக்கும் திட்டத்திற்கு இலங்கை நிலையான எரிசக்தி அதிகாரசபை சுற்றுச்சூழல் அனுமதி கோரியுள்ளது.
இருப்பினும், இந்த காற்றாலை ஆற்றலுக்கான அதிக சாத்தியக் கூறுகளைக் கொண்ட இடம் என்றும், அதனால் எந்த விடயத்திலும் சமரசம் செய்ய முடியாது என்றும் அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எவ்வாறாயினும், இடம்பெயர்ந்த பறவைகளின் பாதைகள், அவற்றின் வாழ்விடங்கள் மற்றும் இனப்பெருக்க முறைகள் ஆகியவற்றில் ஏற்படும் பாதிப் புகளைத் தணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின் றது.
அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் மூலம் இலங்கையில் திட்டங்களை அமைப்பதில் இந்தியாவின் அதானி குழுமம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் முதலீடு செய்வதற்கு திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டங்களில் மன்னார் நகரம் மற்றும் பூநகரிப் பகுதிகளில் மொத்தமாக 484 மெகா வாட் திறன் கொண்ட இரண்டு காற்றாலைகள் அடங்குகின்றன.