எம்.பி இ.அர்ச்சுனாவுக்கு எதிரான அநுராதபுரம் நீதிவான் நீதிமன்ற வழக்கில், 'இ.லோச்சன' என பெயர் தவறானதால் அவரை விடுவித்தது

2 months ago



நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிரான அநுராதபுரம் நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், 'இராமநாதன் லோச்சன' என்று தவறுதாகப் பெயர் குறிப்பிடப்பட்டமையால் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

விஐபி விளக்குகளைப் பயன்படுத்தி போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததற்காக இந்த வழக்குத் தொடரப்பட்டது.

வழக்கு நேற்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேகநபரான நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் ஆவணங்கில் உள்ள பெயரும் பொலிஸாரின் ஆவணங்களில் உள்ள பெயரும் தவறாக இருந்தமையால் நீதிமன்றத்தால் அர்ச்சுனா விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் பெயரை சரியாகப் பயன்படுத்தத் தெரியாமல் இருந்த பொலிஸார் மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

அண்மைய பதிவுகள்