
ஒக்ரோபர் மாதத்தை இந்துக்களின் பாரம்பரிய மாதமாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு இந்து மத கலாசாரம் மற்றும் மரபுகளை கொண்டாடும் வகையிலும், அங்கீகரிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.
நவராத்திரி, தசரா, தீபாவளி உள்ளிட்ட முக்கிய இந்து பண்டிகைகள் பெரும்பாலும் ஒக்ரோபர் மாதத்தில் கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்த வகையில் அவுஸ்திரேலியாவின் இந்த அறிவிப்பு கலாசார முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அமைந்துள்ளது.
அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் ஆளும் தரப்பு உறுப்பினர் சார்ல்டன் இந்த அறிவிப்பை விடுத்தார்.
பன்முக கலாசாரத்துக்கு அவுஸ்திரேலியாவின் அர்ப்பணிப்பை சுட்டிக்காட்டும் விதமாகவும் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.
மேலும், அவுஸ்திரேலிய நாட்டின் சமூக கட்டமைப்பு ரீதியாக இந்துக்களின் பங்களிப்பையும் இது அங்கீகரிக்கிறது.
இதன் மூலம் பழமை வாய்ந்த இந்து மத சம்பிரதாயங்கள், பாரம்பரியத்துக்கு அவுஸ்திரேலியா மதிப்பளிக்கிறது. இது உலக அரங்கில் தற்போது கவனம் பெற்றுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
