திருகோணமலை நகரில் உள்ள கடற்கரையில் இன்று (10) அதிகாலை முதல் இலட்சக் கணக்கான சிறு சிகப்பு நிறத்திலான நண்டுகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி வருகின்றன.
சனி, ஞாயிறு நாள்களில் இப்பிரதே சத்துக்கு கூடுதலான சுற்றுலா பய ணிகள் வருகின்ற நிலையில் இவ்வாறு நண்டுகள் இறந்து ஒதுங்கி வருகின்றன.
மக்கள் இதனைப் பார்வையிட்டு வரகின்றனர்.
இதறாகான காரணம் தெரியாத நிலையில் கடற்றொழிலாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
சுமார் ஐந்து தொடக்கம் ஆறு கிலோ மீற்றர் நீளமுள்ள இந்தக் கடற்கரையில் மூன்று தொடக்கம் 4 கிலோ மீற்றர் தூரம்வரை இவ்வாறான சிகப்பு நிற நண்டுகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளன என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.