யாழ்.கலாசார மத்திய நிலையமொன்றை நிர்மாணிக்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.-- கலாசார உத்தியோகத்தர் கிருஷ்ணகுமார் தெரிவிப்பு

2 months ago



யாழ்ப்பாணக் கலாசார மத்திய நிலையமொன்றை நிர்மாணிப்பதற்கு தற்போது சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்று மாவட்டக் கலாசார உத்தியோகத்தர் கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். நகரில் ஒரேபெயரில் இரண்டு கலாசார மத்திய நிலையங்கள் அல்லது மத்திய மையங்கள் இருக்கமுடியாது.

இந்திய அரசினால் நிர்மாணிக்கப்பட்ட கலாசார மத்திய நிலையம் தற்போது திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம் எனப் பெயர் மாற்றம் பெற்றுள்ளது.

அதனையடுத்து யாழ்ப்பாணக் கலாசார மத்திய நிலையம் நிர்மாணிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

இந்த மையம் யாழ்ப்பாணத்தின் தனித்துவமான அடையாளத்தைப் பாதுகாக்கும் என்பதில் ஐயமில்லை. இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன - என்றார். 

அண்மைய பதிவுகள்