கொவிட் தொற்றின் தோற்றம் குறித்த தரவுகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு உலக சுகாதார ஸ்தாபனம் சீனாவை வலியுறுத்து

1 week ago



கொவிட் தொற்றின் தோற்றம் குறித்த தரவுகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு உலக சுகாதார ஸ்தாபனம் சீனாவை வலியுறுத்தியுள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் கொவிட் தொற்றுப் பரவல் ஆரம்பித்து ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில் உலக சுகாதார ஸ்தாபனம் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளது.

அத்துடன், இந்த தரவுகளைப் பகிர்வது ஒரு தார்மீக மற்றும் அறிவியல் கட்டாயமாகும் எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

நாடுகளிடையே வெளிப்படைத்தன்மை, பகிர்வு மற்றும் ஒத்துழைப்பின்றி, எதிர்காலத்தில் தொற்று நோய்களைத் தடுப்பதற்கு உலக நாடுகளைத் தயார்ப்படுத்த முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளது.

விஞ்ஞானிகள் பலர் இந்த கொவிட் தொற்று இயற்கையாகவே விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவியதாகக் கருதுகின்றனர்.

இருப்பினும், சீனாவின் வூஹான் நகரில் உள்ள ஒரு ஆய்வகத்திலிருந்து பரவியிருக்கலாம் என்ற சந்தேகமும் நிலவுகிறது.

இதனிடையே, உலக சுகாதார ஸ்தாபனத்தின் வலியுறுத்தல் தொடர்பில் சீனா பதிலளிக்கவில்லை எனச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.