விகாரை அமைப்பதற்கு திலீபன் எம்.பி. நிதி
10 months ago
வவுனியாவின் எல்லைப் பகுதியில் உருவாக்கப்பட்ட சிங்களக் குடியேற்றக் கிராமங்களில் ஒன்றான நந்திமித்திரகம கிராமத்தில் விகாரை அமைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் நிதி ஒதுக்கியுள்ளார்.

அங்குள்ள விகாரையின் அபிவிருத்திப் பணிகளுக்காக 10 இலட்சம் நிதியை நாடாளுமன்ற உறுப்பினர் ஒதுக்கியுள்ளதுடன், அங்கு புதிதாக அமைக்கப்படவுள்ள கட்டடம் ஒன்றுக்கான அடிக்கலையும் நாட்டியுள்ளார்.
அதேவேளை, கம்பிலிவெவ சிங்களக் குடியேற்றக் கிராமத்துக்கும் பல்வேறு அபிவிருத்திப் பணிகளுக்காக 19 இலட்சம் ரூபா நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபனால் அண்மையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
