சீனக் கடற்படையின் மருத்துவக் கப்பல் ஒன்று இலங்கைக்கு விரைவில் வரவுள்ளது.
நூறு பணியாளர்கள் பணிபுரியும் இந்தக் கப்பல் 17 கிளினிக்குகளையும் ஐந்து மருத்துவ ஆலோசனை அறைகளையும் கொண்டுள்ளது.
2008 ஆண்டு முதல், இதுவரை 45 நாடுகளுக்குச் சென்று, அந்த நாட்டு மக்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்கியுள்ளது.
சீனக் கப்பல்கள் இலங்கைக்கு வருவதை இந்தியா தொடர்ச்சியாக எதிர்த்துவரும் நிலையில், சீனாவின் இந்த மருத்துவக் கப்பல் வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.