தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக மீண்டும் ஒன்றிணைவதற்கான அழைப்பு எங்களுக்கு வரவில்லை”, என்று கஜேந்திரகுமார் தெரிவிப்பு
6 months ago

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக மீண்டும் ஒன்றிணைவதற்கான அழைப்பு எதுவும் எங்களுக்கு வர வில்லை”, என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைய வேண்டும் என்று அண்மையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி அழைப்பு விடுத்தமை தொடர்பில் செய்தியாளர்கள் நேற்று அவரிடம் கேள்வி எழுப்பிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித் தார்.
நேற்றைய தினம் முன்னணியின் தலைமை பணிமனையில் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.
இந்த சந்திப்பில், எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியில் அதன் சைக்கிள் சின்னத்தில் தனித்து வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போட்டியிடும் - என்றும் கூறினார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
