கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று இரவு இணைய வழியில் அவசரமாக நடைபெற்றது
1 month ago

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று இரவு இணைய வழியில் அவசரமாக நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்டத்தில் ஏப்ரல் மாதம் வரையான கணக்கு அறிக்கையில் ஒதுக்கிய 13 மில்லியன் ரூபாவுக்கான ஒதுக்கீடு மற்றும் கிராஞ்சி வீதி அமைப்புக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் அனுமதியைப் பெறும் நோக்கில் இரவோடு இரவாக இந்தக் கூட்டம் இடம்பெற்றது.
இரவு 8 மணிக்கு ஆரம்பமாகி 9.30 மணிக்கு நிறைவுற்ற இணைய வழி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலகத்தினர், பிரதேச செயலாளர்கள், உள்ளுாராட்சி சபைச் செயலாளர்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் இணைக்கப்பட்டிருந்தனர்.
இருந்த போதும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கோ அல்லது ஊடகவியலாளர்களுக்கோ கூட்டத்தில் இணைந்துகொள்ளும் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
