ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் போலாரிஸ் டான் குழுவினர் விண்வெளி பயணத்தை முடித்துக் கொண்டு பூமிக்கு திரும்பினர்.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் போலாரிஸ் டான் குழுவினர் விண்வெளியில் ஐந்து நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்டு பூமிக்கு திரும்பினர்.
இதனை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சமூக வலைத்தளப் பதிவு மூலம் பகிர்ந்துள்ளது.
வணிக ரீதியான விண்வெளி பயணத்தில் இதுவொரு பெரும் சாதனை என நாசா தெரிவித் துள்ளது.
இந்த பயணத்தில் கோடீஸ்வரர் ஐசக்மேன், ஓய்வு பெற்ற அமெரிக்க விமானப் படை வீரர் ஸ்கார் போடீட் மற் றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன ஊழியர்கள் ஷாரா கில்லீஸ், அன்னா மேனன் ஆகியோர் அங்கம் வகித்தனர்.
கடந்த 11ஆம் திகதி இவர்களது விண்வெளி பயணம் தொடங்கியது. பூமிக்கு மேலே சுமார் 700 கிலோ மீற்றர் உயரத்தில் இவர்கள் விண்வெளி நடை பழகினர்.
அதுவும் தொழில்முறை விண்வெளி வீரர்கள் அல்லாத ஐசக் மேன், ஷாரா கில்லீஸ் ஆகியோரும் விண்வெளியில் மிதந்தபடி நடை மேற்கொண்டனர்.
இந்த பயணத்தில் சுமார் 36இற்கும் மேற்பட்ட விஞ்ஞான ரீதியிலான சோதனைகளை மேற்கொண்டனர்.