இனிமேல் ஊடகவியலாளர்களுக்கு கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு அனுமதி இல்லை. அமைச்சர் இ.சந்திரசேகர் தெரிவிப்பு

2 weeks ago



இனிமேல் ஊடகவியலாளர்களுக்கு கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அனுமதி இல்லை என யாழ்ப்பணம் - கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட் டம் நேற்று(26) நடைபெற்றது.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும், பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் சகாதேவன், தம்பிராசா ஆகியோருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள தம்பிராசாவுக்கு யார் அனுமதி வழங்கியது? எந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது? கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்துபவர்களை ஏன் உள்ளே விடுகின்றீர்கள்?, தம்பிராசாவை வெளியே அகற்றுங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கூறினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் சந்திரசேகர், இனிமேல் பொதுமக்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி இல்லை என தெரிவித்தார்.