யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர் ஒருவர் கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்ட நிலையில், அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கோப்பாய் பொலிஸாரால் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்ட அவர் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய நேற்றைய தினம் விளக்கமறியலில் வைக் கப்பட்டுள்ளார்.மேற்படி மாணவனி டம் இருந்து போதை மாத்திரைகளும் ஒருதொகை கஞ்சாவும் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.