யாழ்.நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 12 பேர் கைது

2 months ago



தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன் பிடிப்பதாக இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படும் சம்பவம் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார்.

இந்நிலையில், தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை சிறைப்பிடித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், தமிழக மீனவர்கள் சென்ற ஒரு விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளதாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.