சுவிற்சர்லாந்தில் இலங்கையைச் சேர்ந்த ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

3 months ago


சுவிற்சர்லாந்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை அதிகாலை இலங்கையைச் சேர்ந்த          ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இது கொலையாக இருக்கலாமென சந்தேகிக்கப்படும் நிலையில், அந்த நபருடன் தங்கியிருந்த இரண்டு சுவிற்சர்லாந்து ஆண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கிளாட்ப்ரூக் என்ற இடத்தில் உள்ள தொடர்மாடியில் குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவசர சேவை மையத்திற்கு கிடைத்து அழைப்பின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், பாதிக்கப்பட்டவரை காப்பாற்ற முயற்சித்தனர். எனினும், அந்த முயற்சி வெற்றியடையவில்லை.

இலங்கையைச் சேர்ந்த 34 வயதுடைய கோபிநாத் என்ற 34 வயதுடைய இலங்கையர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்தில் 40 மற்றும் 54 வயதுடைய இரண்டு சுவிஸ் ஆண்களை சூரிச் கன்டோனல் பொலிஸார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட நபருடன் அவர்கள் குடியிருப்பில் இருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

குறித்த மரணத்திற்கான சரியான காரணம் என்ன என்பது தொடர்பான, சூரிச் பொலிஸ் மற்றும் உள்ளூர் வழக்கறிஞர் அலுவலகத்தால் மேலதிக          விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர், மேலும் வழக்கு வெளிவரும் போது மேலும் விவரங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



அண்மைய பதிவுகள்