ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு அனுப்பப்பட்ட சகல போர் விமானங்களும் மீளத் திரும்பியுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானின் மேல் மற்றும் தெற்குப் பகுதிகளில் உள்ள இராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.
அண்மையில் இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பதிலளிக்கும் வகையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.