வெள்ளப் பேரிடர் காரணமாக, கிளிநொச்சியில் 19 மில்லியன் ரூபா பெறுமதியான கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
3 weeks ago
சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளப் பேரிடர் காரணமாக, கிளிநொச்சியில் 19 மில்லியன் ரூபா பெறுமதியான கால்நடைகள் உயிரிழந்துள்ளன என்று வடமாகாண கால்நடைகள் சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
கிளிநொச்சி மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக 151 மாடுகளும், 2 எருமை மாடுகளும், 98 ஆடுகளும், 956 கோழிகளும் உயிரிழந்துள்ளன.
பதிவுசெய்யப் பட்ட கால்நடைகளின் அடிப்படையில் 19 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் நோய்வாய்ப்பட்ட கால்நடைகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன - என்றார்.