விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் மன்னார் புனித சவேரியார் மகளிர் கல்லூரி மாணவி நயோலின் அபிறியானா 2ஆம் இடம்

2 months ago



கல்வி அமைச்சால் நடத்தப்பட்ட தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் மன்னார் புனித சவேரியார் மகளிர் கல்லூரி மாணவி நயோலின் அபிறியானா இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.

இவர், யாழ். இந்து கல்லூரியில் நடைபெற்ற மாகாண மட்ட போட்டியில் முதலாம் இடத்தை பெற்றவர்.

அதேவேளை, மகரகம ஜனாதிபதி கல்லூரியில் கடந்த ஓகஸ்ட் 3ஆம் திகதி நடைபெற்ற தேசிய மட்ட போட்டியில் இரண்டாம் இடத்தை தனதாக்கியவர்.

மேலும், இவர் 2018ஆம் ஆண்டு தேசிய மட்டத்தில் நடைபெற்ற ஆங்கில பாராயணம் போட்டியில் முதலாம் இடத்தை பெற்றுக்  கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.