யாழ் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சீனாவின் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

























யாழ் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சீனாவின் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு.
யாழ் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வந்த கன மழை காரணமாக தொடர்ச்சியான பாதிப்பினை பொது மக்கள் எதிர்நோக்கி இருந்தனர்.
இவ்வாறான மழையின் பாதிப்புக்கு உள்ளான பொது மக்களுக்கென சீன அரசாங்கம் யாழ் மாவட்டத்தில் 1,070 உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
சீன அரசாங்கத்தின் சகோதர பாசம் செயல்திட்டத்தின் ஒரு அங்கமாக இவ் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று யாழ் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம்,இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் பிரதித்தூதுவர் Mr. Zhu Yanwei, chargé d'affaires ad interim. ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு வழங்கி வைத்தனர்.
குறித்த இந்த உலருணவுப்பொதி வழங்கும் திட்டத்தில் அண்ணளவாக 6,500 ரூபா பெறுமதியுடைய 06.9 மில்லியன் ரூபா பெறுமதியான 1,070பொதிகள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளன.
இதில் உத்தியோகபூர்வமாக யாழ் பிரதேச செயலகத்திற்கு, நல்லூர் பிரதேச செயலகத்திற்கு 50 பயனாளிக்கு பொதிகள் வழங்கப்பட்டதுடன் ஏனைய பொதிகள் பிரதேச செயலகங்கள் ஊடாக பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்விற்கு வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ் மாவட்ட மேலதிக காணி ஸ்ரீ மோகனன்,இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் அதிகாரிகள்,பிரதேச செயலர்கள், உதவிப் பணிப்பாளர் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு,நிர்வாக உத்தியோகத்தர், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர்கள்,பயனாளிகள் கலந்து கொண்டிருந்தனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
