ஈ.பி.டி.பி யின் முன்னாள் எம்.பி கு.திலீபன் மற்றும் பிரத்தியேகச் செயலாளர் நிதி மோசடியில் கைது செய்து பிணையில் விடுவிப்பு

2 weeks ago



ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட முன்னாள்    அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன் மற்றும் அவரது பிரத்தியேகச் செயலாளர் ஆகியோரை வவுனியா மாவட்ட நிதி மோசடிக் குற்றப் பிரிவுப் பொலிஸார் கைது செய்தனர்.

மேற்படி இருவரும் விசாரணைகளின் பின்னர் வவுனியா நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டிருந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டனர். 

15 இலட்சம் ரூபா காசோலை நிதி மோசடி தொடர்பில் முன்னாள் எம்.பி. திலீபனின் பிரத்தியேகச் செயலாளரை நேற்று வியாழக்கிழமை மாலை வவுனியா மாவட்ட நிதி மோசடிக் குற்றப் பிரிவு பொலிஸார் கைது செய்தனர்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து முன்னாள் எம்.பி. கு.திலீபன் இன்று காலை கைது செய்யப்பட்டார்.

மேற்படி இருவரையும் வவுனியா நீதிமன்றத்தில் பொலிஸார் முற்படுத்தியிருந்தனர்.

இதன்போது அவர்கள் 3 இலட்சம் ரூபா பணத்தை முறைப்பாட்டாளருக்குச் செலுத்திய நிலையில், இருவரையும் சரீரப் பிணையில் நீதிமன்றம் விடுவித்தது.