யாழில் பெண் ஒருவரை போனில் அழைத்து, 10 இலட்சம் ரூபா வரையில் மோசடி.-- பொலிஸில் முறைப்பாடு

1 month ago



யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவரைத் தொலைபேசியில் அழைத்து, அதிஷ்டலாபத்தில் பெருந்தொகைப் பணம் கிடைத்திருப்பதாகத் தெரிவித்து 10 இலட்சம் ரூபா வரையில் மோசடி செய்யப்பட்டுள்ளதாக                பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது.

மோசடியாளர்களின் உரையாடலை நம்பிய அந்தப் பெண், தனது வங்கிக் கணக்குத் தொடர்பான விடயங்களை அவர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ஓ.ரி.பி. எனப்படும் ஒரு தடவை மட்டும் பயன்படுத்தும் கடவுச்சொல்லையும் நம்பிக்கையின் அடிப்படையில் அந்தப் பெண் கொடுத்துள்ளார்.

இதன் பின்னரேயே அந்தப்        பெண்ணின் வங்கிக் கணக்கில் இருந்து 10 இலட்சம் ரூபா வரை மோசடி செய்யப்பட்டுள்ளது.

அந்தப் பெண்ணின் தரப்பால்    வழங்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.