யாழ்.புங்குடுதீவு பாடசாலைகளுக்கு அருகாக உள்ள பகுதிகளிலும், பற்றைக்காடுகளிலும் பல்வேறு குற்றச்செயல்கள் அதிகரிப்பு
3 months ago

யாழ்ப்பாணம், புங்குடுதீவு பாடசாலைகளுக்கு அருகாக உள்ள பகுதிகளிலும், பற்றைக்காடுகளிலும் பல்வேறு குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கசிப்புக் காய்ச்சுதல், திருடிய மாடுகளை சட்டவிரோதமாக இறைச்சியாக்குதல் உள்ளிட்ட குற்றச் செயல்கள் சடுதியாக அதிகரித்துள்ளன.
பொலிஸாரிடம் அது தொடர்பில் முறைப்பாடுகள் வழங்கிய போதிலும் எந்தவொரு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டாலும் நீண்டநேரத்தின் பின்னரே பொலிஸார் வருகின்றனர். சிலவேளைகள் வருவதேயில்லை.
எனவே, இந்தக் குற்றச் செயல்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்புண்டா? என்று எண்ண வேண்டியுள்ளது என்றும் பொதுமக்கள் மேலும் கூறியுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
