
ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் யாழ். தேர்தல் மாவட்ட வேட்பாளர் சசிகலா ரவிராஜ் பயணித்த கார் மீது இனம் தெரியாத நபர்கள் கல் வீச்சு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
தனது வீட்டில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை (05) மாலை பிரச்சார பணிகளுக்காக காரில் பயணித்த போது கார் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காரில் சசிகலா ரவிராஜ் இருந்த போதிலும் காயங்கள் எதுவும் இன்றி தப்பியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் சசிகலா ரவிராஜ் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளும் கல் வீசி உடைக்கப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை (05) அவர் பயணித்த கார் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
