
டொரொன்டோவில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
பியர்சன் விமான நிலையத்தின் பயணிகள் இவ்வாறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் விமான நிலையத்தில் பணியாளர்களுக்கு நிலவும் பற்றாக்குறை காரணமாக இந்த அசௌகரிய நிலை மேலும் அதிகரித்துள்ளது.
காலநிலை காரணமாக பணியாளர்களின் வருகை குறைவடைந்துள்ளதாகவும் இதனால் விமான நிலையத்தின் தொழிற்பாடுகளை மேற்கொள்வதில் சவால்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சில பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பயணிகள் அதிக அளவு நேரம் காத்திருந்து விமான பயணங்களை மேற்கொள்ள நேரிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சீரற்ற காலநிலை காரணமாக விமான பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
விமான நிலையத்தில் பொழியும் பனிப் படலத்தை அகற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக விமான ஓடுபாதைகளை பனி படலத்திலிருந்து மீட்பதற்கு விசேட முனைப்புகள் முன்னெடுக்கப்பட்டன என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
