யாழ்.சுன்னாகம் பொலிஸாரால் தமது உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக குடும்பம் ஒன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
5 months ago

யாழ்.சுன்னாகம் பொலிஸாரால் தமது உயிர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதாக ஒரு குடும்பம் தமக்கு பாதுகாப்பு வழங்குமாறும் கோரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
கடந்த வாரம் சுன்னாகப் பொலிசாரால் குடும்பம் ஒன்று வீதியில் வைத்து அச்சுறுத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பம் தமக்கு குறித்த பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களால் உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
