மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 59 பேர் கைது.
7 months ago





மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் 15 ஐஸ் போதைப் பொருள் விற்பனையாளர்கள் உட்பட கசிப்பு விற்பனை மற்றும் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்ட 59 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யுக்திய போதை ஒழிப்பு திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பிலேயே இந்த கைது நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
இதன்போது, ஐஸ் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட 15 பேர், கசிப்பு உற்பத்தி, விற்பனை மற்றும் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 44 பேர் அடங்கலாக 59 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று(20) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
