கிளிநொச்சி மத்திய கல்லூரி உயர்தர கணிதப் பிரிவு மாணவன் கோ.சரித்திரன் ஒலிம்பிக் போட்டிக் குழாமில் இடம் பிடித்துள்ளான்.
இலங்கை முழுவதிலிருந்தும் விளையாட்டில் திறமைமிக்க 202 மாணவர்கள் தெரிந்தெடுக்கப்பட்டனர்.
அவர்களின் தனிப்பட்ட ஆற்றல்களை பரிசோதித்து 56 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். அவர்களில் உயரம் பாய்தல் போட்டியில் சாதனை படைத்து கோ.சரித்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.