சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிர்வாகச் செயலாளர் ரேணுக பெரேரா சி.ஐ.டியினரால் நேற்று(05) கைது செய்யப்பட்டார்.
மாவீரர் நினைவேந்தல் தொடர்பில் சமூக ஊடகங்களில் போலியான தகவல்களை பரப்பிய குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டார் எனக் கூறப்படுகின்றது.
கொட்டிகாவத்தை பகுதியிலுள்ள அவரது வீட்டில் வைத்தே சி.ஐ.டி அதிகாரிகளால் நேற்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.