யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் இருவர் பேராசிரியர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
3 months ago
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் இருவர் பேராசிரியர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழக பேரவையின் மாதாந்தக் கூட்டம் நேற்று துணை வேந்தர் பேராசிரியர் சி.சிறீசற்குணராஜா தலைமையில் நடைபெற்றது.
இதில், முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிகபீடத்தின் வணிகவியல்துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சிவபாலன் அச்சுதன் வணிகவியல் பேராசிரியராக பதவி உயர்த்தப்பட்டார்.
இதேபோன்று, விஞ்ஞான பீடத்தின் பௌதிகவியல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி முருகதாஸ் தணிகைச் செல்வன் இலத்திரனியல் பேராசிரியராக பதவி உயர்த்தப்பட்டார்.