அரிய வகை மீனை தேடி சென்ற ஆராய்ச்சியாளர்களின் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர்.
அட்லாண்டிக் கடலின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள தீவுக்கூட்டம் போக்லாந்து தீவுகள். இந்த தீவுக்கூட்டத்தை இங்கிலாந்து நிர்வகித்து வரும் நிலையில் தீவுக்கூட்டம் தங்களுக்கு சொந்தமானது என்று ஆர்ஜென்ரீனா கூறிவருகிறது. இதனிடையே, அட்லாண்டிக் கடலின் போக்லாந்து தீவுப் பகுதியில் டூத்பிஷ் என்ற அரிய வகை மீன் காணப்படுகிறது.
இந்த நிலையில், இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் உள்ல செயிண்ட் ஹெலீனா தீவில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் உட்பட 30 பேர். அரியவகை டூத்பிஷ் மீனை தேடி மீன்பிடி படகில் புறப்பட்டுள்ளனர்.
போக்லாந்து தீவில் இருந்து கடலில் 200 மைல் தொலைவில் சென்றுகொண்டிருந்தபோது மோசமான வானிலை காரணமாக படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 22 பேர் கடலில் மாயமாகினர்.