அடுத்த 24 மணி நேரத்திற்கு வங்கக் கடலில் கன மழை, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம்.-- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுப்பு

2 months ago



அடுத்த 24 மணி நேரத்திற்கு தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் கன மழை, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்துடன் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் நேற்று மாலை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலில் நேற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு    மண்டலம் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இது அடுத்த இரண்டு நாட்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி, மேற்கு - வடமேற்கு திசையில் வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி நகரும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

06 மற்றும் 12 வடக்கு அட்சரேகைகள் மற்றும் 81 மற்றும் 93 கிழக்கு தீர்க்க ரேகைகளுக்கு இடைப்பட்ட கடல் பகுதிகளில், ஒரு கிலோ மீற்றருக்கு மிகப் பலமான காற்று வீசுவதுடன் கனமழை பெய்யும் சாத்தியம் உண்டு.

அத்துடன் கடல் சீற்றத்துடன் இருக்கும் என அதில் கூறப்பட்டுள்ளது. 

அண்மைய பதிவுகள்