
புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பணிப்புரைக்கமைய கையளிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய வாகனங்களில் சில மாயமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இலங்கையின் 9ஆவது நிறை வேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக பதவியேற்றதன் பின்னர் முன்னாள் அமைச்சரவையின் அமைச்சர்கள் பயன்படுத்திய வாகனங்களைக் கையளிக்குமாறு பணிப்புரை விடுத் திருந்தார்.
இந்நிலையில், குறித்த பணிப் புரைக்கமைய கையளிக்கப்பட் டிருந்த முன்னாள் அமைச்சரவையின் அமைச்சர்கள் பயன்படுத்திய வாகனங்களின் எண்ணிக்கை குறைவாக காணப் பட்டுள்ளது.
இதனையடுத்து, மாயமான முன்னாள் அமைச்சரவையின் அமைச்சர்கள் பயன்படுத்திய வாகனங்கள் தொடர்பில் ஜனா திபதி நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
